லாஸ் ஏஞ்சலிஸ்: ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை அரை மணி நேரத்தில் உறுதி செய்யக்கூடிய சோதனையை மேம்படுத்தி வருவதாக கலிஃபோர்னிய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
அந்தச் சோதனை முறை உறுதி செய்யப்பட்டதும் அமெரிக்க அரசாங்கத்தின் ஒப்பதலை உடனடியாகப் பெற்று உலகெங்கும் அது கிடைக்க வகை செய்ய திட்டமிட்டிருப்பதாக செஃபைட் நிறுவனம் கூறியது.

