தைப்பே: கொரோனா கிருமித்தொற்று தொடர்பாக தைவானுக்குப் பயணத் தடையை பிலிப்பீன்ஸ் விதித்துள்ளது. கொரோனா கிருமித்தொற்று சீனாவில் தொடங்கியதாகவும் ஒரே சீனா கொள்கையின் அடிப்படையில் தைவானுக்குப் பயணத் தடை விதிப்பது நியாயமில்லை என்றும் தைவான் சாடியது.
சீனாவில் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டதும் தைவானில் அது பெருமளவில் பரவாமல் இருக்க அந்நாட்டு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது.
தற்போது தைவானில் 18 பேருக்கு அக்கிருமி தொற்றியுள்ளது.

