காய்ச்சல், இருமல் மருந்துக்குத் தடை

1 mins read
fb169b9a-95ae-4042-8eb1-887f7b284168
சீனாவில் குறைந்தது மூன்று நகரங்கள் காய்ச்சல், இருமல் மருந்து விற்பனையைத் தடை செய்துள்ளன. -

பெய்ஜிங்: சீனாவில் குறைந்தது மூன்று நகரங்கள் காய்ச்சல், இருமல் மருந்து விற்பனையைத் தடை செய்துள்ளன.

இதன்மூலம் நோய்வாய்ப்பட்டிருப்போர் வேறு வழியின்றி மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும். அவர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று தொற்றியுள்ளதா என்பதைக் கண்டறிய அவர்களுக்கு அங்கு சோதனை நடத்தப்படும்.

காய்ச்சல், இருமல் ஆகியவற்றுடன் மூச்சுத்திணறலும் நிமோனியாவும் கொரோனா கிருமித்தொற்றுக்கான அறிகுறி என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சல், இருமல் இருப்பவர்களை மருத்துவமனைக்குச் செல்லும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 2020-02-12 06:10:00 +0800