தென்கொரியத் தேர்தலில் முன்னாள் வடகொரியத் தூதரக அதிகாரி போட்டி

1 mins read

சோல்: பிரிட்டனுக்கான வடகொரிய துணைத் தூதராக இருந்த தே யோங் ஹா, 2016 ஆகஸ்ட்டில் தமது பதவியைத் துறந்து தென்கொரியாவில் தஞ்சம் புகுந்தார். அப்போதிருந்து வடகொரியாவையும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் அணுகுமுறையையும் வெளிப்படையாக விமர்சித்து வரும் திரு தே, எதிர்க்கட்சியான கொரிய சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார். இவ்வாண்டு ஏப்ரல் 15ஆம் தேதி நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள அவர், தமது வெற்றியால் வடகொரியர்கள் ஊக்கம் பெறுவர் என்றும் சொன்னார்.