சிங்கப்பூர்- மலேசியா இணைந்து செயலாற்றும்

1 mins read
309f6da5-8c9f-4ace-8418-1f1cee7bba30
உபியிலுள்ள சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தலைமைய கத்துக்கு நேற்று வருகையளித்த திரு அம்ரின் அமின் துணை மருத்துவ ஊழியர்களின் முழுப் பாதுகாப்பு கவச உடை பற்றி அறிந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமித்தொற்று பரவலுக்கு எதிரான போரில் சிங்கப்பூரும் மலேசியாவும் பல வழிகளில் இணைந்து செயலாற்றும் என்று சிங்கப்பூரின் சுகாதாரத்துக்கான மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் தெரிவித்துள்ளார். கிருமி பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்வது, சோதனைக் கருவிகள் உட்பட பல துறைகளில் இரு நாடும் ஒத்துழைக்கும் என்றார் அவர்.துறைமுகத் துறையினால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட நேற்று சிங்கப்பூர் துறைமுக ஆணையத்துக்கு வருகையளித்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். கிருமிப் பரவலைக் கையாளும் மலேசிய-சிங்கப்பூர்க் கூட்டுப் பணிக்குழுவிற்கு, மலேசிய அமைச்சருடன் அவர் இணைந்து தலைமை தாங்குகிறார்.