ஹேம்ப்‌ஷியர் போட்டி: சாண்டர்ஸ் வெற்றி

ஹேம்ப்‌ஷியர் போட்டி: சாண்டர்ஸ் வெற்றி

1 mins read
9b0e31c0-c6f2-41d7-a8fe-ab45cc3034e6
நியூ ஹேம்ப்‌ஷியரின் வேட்பாளரைப் பரிந்துரைக்கும் போட்டியில் ஜனநாயகக் கட்சியின் பெர்னி சாண்டர்ஸ் (இடது) வென்றுள்ளார்.  சாண்டர்ஸின் போட்டியாளரான ஜோ பைடன் பின்னடைவைக் கண்டார். படம்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ் -

நியூ ஹேம்ப்‌ஷியர்: நியூ ஹேம்ப்‌ஷியரின் வேட்பாளரைப் பரிந்துரைக்கும் போட்டியில் ஜனநாயகக் கட்சியின் பெர்னி சாண்டர்ஸ் வென்றுள்ளார்.

78 வயது சாண்டர்சின் கருத்துகளால் அவரது கட்சி வரும் 3ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தோல்வி அடையப் போகிறது என்று எதிர்க்கட்சிகள் சாடி வந்தன.

இந்நிலையில், அதைத் தோற்கடிக்கும் விதமாக அவரது வெற்றி அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. சாண்டர்சுக்கு கிட்டதட்ட 26% ஆதரவு கிடைத்தது.

"இந்தப் பெரிய வெற்றியைப் பெற்றதற்காக நியூ ஹேம்ப்‌ஷியர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று மான்செஸ்டரில் தன் ஆதரவாளர்களுக்கிடையே பேசியபோது கூறினார் ஜனநாயகக் கட்சியின் சாண்டர்ஸ்.

கடந்த வாரம் அயோவாவில் நடந்த வேட்பாளரைப் பரிந்துரைக்கும் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இண்டியானாவின் முன்னாள் மேயரான 38 வயதான பீட் புட்டிஜ், இரண்டாவது இடத்தில் இருந்

தார். இதில் சாண்டர்ஸின் போட்டியாளரான ஜோ பைடன் பின்னடைவைக் கண்டார். அவர் ஐந்தாவது இடத்தைப் பிடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜோ பைடன் அயோவா போட்டியிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தார்.

குடியரசுக் கட்சியின் தரப்பில், மாசாசூசெட்ஸின் முன்னாள் ஆளுநரான வில்லியம் வெல்ட்டை எளிதில் தோற்கடித்தது, அதிபர் டிரம்ப் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நியூ ஹேம்ப்‌ஷியரில் உள்ள வாக்காளர்கள், வாக்குப்பதிவின் போது 33 வேட்பாளர்களில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்கள். இதில் கடந்த வாரத்தில் வெளியான வேட்பாளர்களும் அடங்குவர்.