ரெம்பாவ்: இரண்டு வயது குழந்தை காரிலிருந்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக அலட்சியமாக செயல்பட்ட மைவி காரின் ஓட்டுநர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
20 வயது ஓட்டுநருக்கு எதிரான அந்த ஆணையை நீதிமன்றம் வழங்கியதாக நெகிரி செம்பிலான் போக்குவரத்து அமலாக்கத் துறை அதிகாரி இப்ராஹிம் அப்துல் காதில் கூறினர்.
இதையடுத்து நேற்று மாலை 4.50 மணிக்கு கைது செய்யப்பட்ட அந்நபர், வரும் 14ஆம் தேதி வரை காவலில் இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
செனவாங்கின் பிளஸ் நெடுஞ்சாலைப் பகுதியில் ஹோண்டா ஜாஸ் காரும் மைவி காரும் பந்தயத்தில் ஈடுபட்டபோது நிகழ்ந்த அந்த விபத்தையடுத்து, இரண்டு வயது குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டதாகவும் அவர் சொன் னார்.
பின்னால் வந்த லாரி ஓட்டுநர் அக்குழந்தையைக் காப்பாற்றி சிகிச்சைக்காக துங்கு ஜாபார் மருத்துவமனையில் சேர்த்தார்.
இச்சம்பவம் தொடர்பான 59 வினாடி காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

