அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பால் முன்வைக்கப் பட்டுள்ள அமைதி திட்டத்தினை நிராகரிப்பதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது.
நியூயார்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடரில் பங்கேற்று உரையாற்றியபோது பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நான் இங்கு வந்திருப்பது பாலஸ்தீனம் இஸ்ரேல் தொடர்பான அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை பாலஸ்தீனம் நிராகரித்துவிட்டது என்பதைக் கூறுவதற்குத்தான்.
இந்தத் திட்டம் பாலஸ்தீனர்களின் உரிமைகளின் நியாயத்தன்மையையும் சுயநிர்ணய உரிமையையும் ரத்து செய்கிறது. இது சட்டவிரோதமான குடியேற்றங்களை நியாயப்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர் பாக இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

