இந்தோனீசியாவில் எரிமலை சீற்றம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் யோக்யகர்த்தா நகர் அருகே அமைந்துள்ள மெராப்பி எரிமலை நேற்று வெடித்தது. உலகின் ஆக உயிர்துடிப்புடன் இருக்கும் எரிமலைகளில் இதுவும் ஒன்று.

எரிமலை சீற்றம் அடைந்ததையொட்டி எச்சரிக்கை நிலையை அதிகாரிகள் உயர்த்தா விட்டாலும், அப்பகுதி வழியாக பறக்கும் விமானங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 1930ஆம் ஆண்டிற்குப் பிறகு மெராப்பி எரிமலை இவ்வளவு மோசமாக வெடித்திருப்பது இதுவே முதன்முறை.