விமான நிறுவனங்களுக்கு $6.9 பில்லியன் இழப்பு ஏற்படலாம்: ஐநா அமைப்பு

விமான நிறுவனங்களுக்கு $6.9 பில்லியன் இழப்பு ஏற்படலாம்: ஐநா அமைப்பு

1 mins read
938e2175-24df-4cdb-85d9-e04512ee197c
கிருமித்தொற்று காரணமாக 70 விமான நிறுவனங்கள் சீனாவுக்கு உள்ளேயும் வெளியேயும் தங்களது அனைத்துலகச் சேவைகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளன. படம்: ராய்ட்டர்ஸ் -

கொரோனா கிருமி மிரட்டல் காரணமாக உலகம் முழுவதும் செயல்படும் விமான நிறுவனங்களுக்கு $6.9 பில்லியன் இழப்பு ஏற்படக்கூடும் என்று அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்துக் கழகம் கணக்கிட்டுள்ளது.

கிருமித்தொற்று காரணமாக 70 விமான நிறுவனங்கள் சீனாவுக்கு உள்ளேயும் வெளியேயும் தங்களது அனைத்துலகச் சேவைகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளதாகவும் இதர 50 நிறுவனங்கள் சேவைகளைக் குறைத்துள்ளதாகவும் அந்த ஐநா அமைப்பு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்