வெஸ்டர்டாம் சொகுசு கப்பல் பயணிகள் வெளியேறினர்

1 mins read

நோம் பென்: கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த வெஸ்டர்டாம் சொகுசு கப்பலின் பயணிகள் அதிலிருந்து வெளியேறியுள்ளனர். கப்பலைவிட்டு வெளியேறிய பயணிகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றார் கம்போடியப் பிரதமர் ஹன் சென். அக்கப்பலில் உள்ள பயணிகளுக்கு கொரோனா கிருமி தொற்றியிருக்கக்கூடும் என்ற அச்சத்தில் பல நாடுகள் அக்கப்பலை அவற்றின் துறைமுகங்களில் நங்கூரமிட அனுமதிக்கவில்லை. அக்கப்பலின் பயணிகள் எவருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை.