கொரோனா கிருமிக்கு பலியானோருக்காக மௌன அஞ்சலி

கொரோனா கிருமிக்கு பலியானோருக்காக மௌன அஞ்சலி

1 mins read
7e8e9271-baa2-45b7-aaad-5b9f9fb183dd
கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சமயத் தலைவர்கள் கடந்த புதன்கிழமையன்று 'கொவிட்-19' கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியை வழிநடத்தினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சமயத் தலைவர்கள் கடந்த புதன்கிழமையன்று 'கொவிட்-19' கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியை வழிநடத்தினர். தற்போது கிருமித்தொற்றால் நிலவி வரும் நெருக்கடி காலத்தை வலிமை பெற்று பரஸ்பர நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இந்த மௌன அஞ்சலி நடந்தது.

'இதுவும் கடந்து போகும்' என்றவாறு இந்த கிருமித்தொற்றைக் கருதி அமைதி காத்து, ஒற்றுமையுடனும் சமூக பொறுப்புணர்வுடனும் மக்கள் செயல்படுவதை வலியுறுத்துவதே இந்த அங்கத்தின் நோக்கமாக இருந்தது. மௌள அஞ்சலியை அடுத்து வெவ்வேறு சமயங்களின் பழக்க வழக்கங்களைப் பற்றிய கலந்துரையாடல் அங்கமும் இடம்பெற்றது.

இவ்வாறு 'சிஎஸ்சிஎஸ்' கலந்துரையாடல் தொடரில் மற்ற சமயங்களைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ளவும் அதனால் சமூக நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தவும் முடிகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்