உடற்குறையுள்ளோர் இல்லத்தில் படுகொலை; மரண தண்டனை கோரும் வழக்கறிஞர்கள்

உடற்குறையுள்ளோர் இல்லத்தில் படுகொலை; மரண தண்டனை கோரும் வழக்கறிஞர்கள்

1 mins read
19755f95-13ac-4ed5-8b92-0ff9adce00b6
-

ஜப்பானின் அரசுதரப்பு வழக்கறிஞர்கள், உடற்குறையுள்ளோர் இல்லத்தில் 19 பேரைக் கொன்ற 30 வயது ஆடவருக்கு மரண தண்டனை விதிக்கக் கோருகின்றனர்.

2016ல் நடந்த இந்தச் சம்பவத்தின் குற்றவாளி என சதோஷி உவேமாட்சு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டபோதும் அவருக்கு புத்தி பேதலித்திருப்பதாக தற்காப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சதோஷி இந்தக் "கொடூரமான, முற்றிலும் மனிதாபிமானமற்ற" கொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் என்று அரசுதரப்பினர் வாதிட்டனர்.

இவ்வழக்கின் விசாரணை இவ்வாரத்திற்குள் முடியும் என்றும் அடுத்த மாதம் 13ஆம் தேதியன்று நீதிமன்றத் தீர்ப்பு வெளிவரும் என்றும் ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.