சரவாக்கில் மேலும் ஐவருக்கு கிருமித்தொற்று பரிசோதனை

சரவாக்கில் மேலும் ஐவருக்கு கிருமித்தொற்று பரிசோதனை

1 mins read
3934b44f-7024-41ce-a3a3-aa4d4e3546e8
சரவாக்கில் கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று பாதிப்புக்காக மேலும் ஐவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலேசியாவின் சரவாக்கில் கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று பாதிப்புக்காக மேலும் ஐவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து நோயாளிகளும் சரவாக் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சரவாக் பேரிடர் நிர்வாகக் குழுவின் அலுவலகம் தெரிவித்தது.

இதனையடுத்து, சரவாக்கில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சந்தேகத்தில் மொத்தம் 97 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் 74 பேர் மலேசியர்கள்; 20 பேர் சீன நாட்டவர்; ஒரு இந்தோனீசியர்; ஒரு கனடியர்; ஒரு தாய்லாந்து நாட்டவர்.

நிலம், கடல், வான் வழியாக சரவாக்குக்குள் வந்த சுமார் 119,000 பேரை கிருமித்தொற்று அறிகுறிகளுக்காக சரவாக் சுகாதாரத் துறை பரிசோதித்துள்ளது.

இதுவரை சரவாக்கில் யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

#தமிழ்முரசு #சரவாக் #கொரோனா

குறிப்புச் சொற்கள்