மலேசிய கல்வியாளர், எழுத்தாளர் கே.எஸ்.மணியம் மறைவு

மலேசிய கல்வியாளர், எழுத்தாளர் கே.எஸ்.மணியம் மறைவு

1 mins read
b081e939-9a3d-46fe-872b-484938b7ead7
மலேசியாவின் கல்வியாளரும் எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் (சுப்பிரமணியம் கிருஷ்ணன்) நேற்று (பிப்ரவரி 19) புதன்கிழமை பிற்பகலில் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் இயற்கை எய்தினார். படம்: தி ஸ்டார் -

மலேசியாவின் கல்வியாளரும் எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் (சுப்பிரமணியம் கிருஷ்ணன்) நேற்று (பிப்ரவரி 19) புதன்கிழமை பிற்பகலில் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

அவருக்கு வயது 78. புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

கெடாவிலுள்ள பெடோங் கெனும் கிராமத்தில் 1942ஆம் ஆண்டு பிறந்தவர் திரு மணியம்.

சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற பல பரிமாணங்களில் எழுதிய திரு மணியம், மலேசிய இந்தியர் சமூகத்தைப் பற்றி தமது படைப்புகளில் எழுதினார்.

அவரது படைப்புகள் ஆங்கிலத்தில் இருந்தன. மலேசிய இந்தியர்களிடையே நன்கு அறியப்பட்ட எழுத்தாளராகத் திகழ்ந்தார் திரு மணியம்.

தமது 22வது வயதில் முதல் படைப்பை வெளியிட்ட திரு மணியம், தென்கிழக்கு ஆசியாவில் எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் 'ராஜா ராவ்' விருதை வென்றவராவார்.

அவரது ஆங்கில எழுத்துகளையும் படைப்புகளையும் மலேசிய இலக்கியக் குழு ஒன்று தமிழில் மொழிபெயர்த்தது.

திரு கே.எஸ்.மணியத்தின் படைப்புகளை எழுத்தாளர் விஜயலட்சுமி தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தினார்.

#மலேசியா #KSManiyam #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்