'அன்வாருக்காக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும்'

'அன்வாருக்காக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும்'

1 mins read
edf4ff68-ee21-4985-86d0-c5df3b60019c
மலேசிய பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் (இடது) உடன் மலேசிய பிரதமர் மகாதீர். படம்: இபிஏ -

மலேசிய பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் வரும் மே மாதத்திற்குள் பிரதமராக பதவியேற்காவிட்டால், அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்கிறது தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஷயத்தில் இனியும் தாமதம் இருக்கக்கூடாது என்கின்றர் ஒட்டாய் சீர்திருத்தம் 1998 என்று அழைக்கப்படும் அன்வர் ஆதரவு குழுவினர்.

"மகாதீர் முகம்மது இரண்டு ஆண்டுகள் பிரதமராக இருக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்திற்கு மரியாதையளிக்க வேண்டும்," என்றார் குழுவின் செயலாளர் அப்துல் ரசாக் இஸ்மாயில் தெரிவித்தார்.

அப்துல் ரசாக்கின் கருத்துப்படி, தலைமைத்துவத்தை எப்போது அன்வாரிடம் ஒப்படைப்பார் என்று மகாதீரும் ஆவணம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும் என்று அன்வார் ஆதரவு குழு விரும்புவதாக தெரிகிறது.

"ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படி மே மாத தலைமை மாற்றத்திற்கான தேதி உறுதி செய்யப்படும்," என்றார் அவர்.

இதற்கிடையே, இன்று நடைபெறவுள்ள நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் பிரதமர் மகாதீர் முகம்மது, அன்வார் இப்ராகிமுடன் அதிகாரத்தை மாற்றுவதற்கான தேதியை நிர்ணயிக்க வேண்டுமென்று சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் அணி அழைப்பு விடுத்துள்ளது.

மகாதீர் பதவியில் நீடிக்க விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சத்தியப்பிரமாணம் இருப்பதாகக் கூறப்படுவதால் அதிகார மாற்றம் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.

எவ்வாறாயினும், நவம்பரில் நடக்க இருக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) உச்சிநிலை மாநாட்டிற்குப் பிறகு தாம் பதவி விலகுவதற்கான தனது உறுதிப்பாட்டை மகாதீர் ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளார்.

#மலேசியா #அன்வார் #மகாதீர் #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்