சிறுவனின் கைகளில் விலங்கிட்ட போலிஸ் அதிகாரி

சிறுவனின் கைகளில் விலங்கிட்ட போலிஸ் அதிகாரி

1 mins read

கோத்தா கினபாலு: விளையாட்டு துப்பாக்கியைப் பயன்படுத்தி தானம் கேட்ட சிறுவனின் கைகளில் விலங்கிட்ட போலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிஸ் உயர் அதிகாரி உறுதி அளித்துள்ளார்.

புதன்கிழமை காலை 10.36 மணியளவில் தாமான் அமான் ஜெயா, பண்டார் ஸ்ரீ பெர்டானா போக்குவரத்து சமிக்ஞை விளக்கில், உதவி கேட்கும் போது ஒரு சிறுவன் விளையாட்டு துப்பாக்கியை உபயோகித்தது குறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதை அடுத்து அச்சிறுவனையும் அவனோடு தொடர்புடைய 14 பேரையும் லாஹாட் டத்து போலிசார் கைது செய்தனர். அத்துப்பாக்கியை அவனது அம்மா வாங்கிக் கொடுத்ததாக விசாரணையில் தெரிய வந்தது.