குள்ளத்தன்மையுடன் பிறந்த குவைடன் பேய்ல்ஸ் என்ற ஆஸ்திரேலிய சிறுவன், தன் பள்ளியில் படாத பாடுபடவே 'நான் இப்போதே இறந்துவிட வேண்டும்' என்று அவனின் தாயாரிடம் புலம்பினான்.
அழுகையும் புலம்பலுமாக அவனின் சோகம் தோய்ந்த நிலையைக் காணொளியாக எடுத்த அவனின் தாயார், அதைத் தம் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.
குள்ளமாக இருந்த காரணத்தால் பள்ளியில் பல தொல்லைகளுக்கு ஆளாகிய தம் ஒன்பது வயது மகன்மீது எத்தகைய தாக்கம் ஏற்பட்டுள்ளது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அவர் இவ்வாறு செய்ததாகக் கூறினார்.
இதுவரை அக்காணொளி 16 மில்லியனுக்கு மேல் பார்வையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பல பிரபலங்கள் உட்பட உலகின் பலர் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் இணையத்தில் ஆறுதல் வார்த்தைகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள 'டிஸ்னிலேண்ட்'டுக்கு குவைடன் வரவேண்டும் என்ற இலக்குக்காக பிரபல அமெரிக்க நகைச்சுவை கலைஞர் ஒருவர், 150,000 (S$210,000) அமெரிக்க டாலரையும் திரட்டியுள்ளார்.
#Quaden #ஆஸ்திரேலிய சிறுவன் #குள்ளம் #தமிழ்முரசு

