இத்தாலியில் நான்காவது நபருக்கு கொரோனா கிருமித்தொற்று

இத்தாலியில் நான்காவது நபருக்கு கொரோனா கிருமித்தொற்று

1 mins read

மிலான்: கொரோனா கிருமித்தொற்றுக்கு இத்தாலிய குடிமகன் ஒருவர் ஆளாகியுள்ளார் என்று அதன் லொம்பாடி வட்டாரத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது. அந்த 38 வயது ஆடவர் கொடோக்னோ நகரின் வடக்கில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அறிக்கை தெரி வித்தது. இரண்டு சீன சுற்றுப்பயணிகள், ஓர் இத்தாலிய குடிமகன் ஆகியோருக்கு அடுத்து இது நான்காவது கிருமித்தொற்று சம்பவம்.