கோலாலம்பூர்: 'எல்டிடிஇ' எனப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததன் தொடர்பில் 12 பேர் மீது பதிவாகியிருந்த குற்றச்சாட்டுகளை மலேசியா நேற்று மீட்டுக்கொண்டது.
ஆளும் கூட்டணி கட்சியான பக்கத்தான் ஹரப்பானைச் சேர்ந்த இரு தலைவர்கள் உட்பட அந்த 12 பேரும் 'எல்டிடிஇ'க்கு ஆதரவாக இயங்கியதன் பேரில் சென்ற ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாத அமைப்பு என்று கூறப்படும் 'எல்டிடிஇ'க்காக இவர்கள் நிதி திரட்டியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அறுவர் 2014ஆம் ஆண்டில் குற்றம் புரிந்ததாக நம்பப்படுகிறது.
ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்ததற்காக இப்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல என்று அரசாங்கச் சட்ட தலைமை அதிகாரி டோமி தாமஸ் கூறி தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்ட நடவடிக்கைகளை நிறுத்தினார். இவரின் முடிவை ஒரு சாரார் பாராட்டினாலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இயங்கி வரும் மலேசியா, நாட்டின் சட்டதிட்டங்களைப் பாகுபாட்டுடன் மேற்கொண்டுள்ளதாக மற்றோர் சாரார் பழிக்கின்றனர்.

