டிண்டரில் மலர்ந்தது; மரணத்தில் முடிந்தது

டிண்டரில் மலர்ந்தது; மரணத்தில் முடிந்தது

1 mins read
f24c8a21-a110-43e6-a391-1f25cd143afa
நியூசிலாந்துக்குத் தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட 22 வயது பிரிட்டிஷ் இளையர் கிரேஸ் மில்லேன் அங்கு ஒரு ஆடவரால் கொலை செய்யப்பட்டார். படம்: ஊடகம் -

ஆக்லன்: தனியாக நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் வந்த பிரிட்டிஷ் இளையர் கிரேஸ் மில்லேன், 22, 'டிண்டர்' செயலிவழி 28 வயதுடைய வாலிபனைச் சந்தித்து அவன் கையாலேயே கொலை செய்யப்பட்டதை அடுத்து வாலிபனுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகப் படிப்பை முடித்த கிரேஸ், நியூசிலாந்துக்குத் தனியாகச் சென்றிருந்தபோது காணாமல் போனதை அடுத்து சில நாட்களில் அவரின் உடல் புதர்கள் நிறைந்த நிலப்பகுதியில் புதையுண்டு கிடந்தது.

தன் வீட்டில் கிரேஸ் இறந்தார் என்று வாலிபன் கூறியபோதும் அது ஒரு விபத்து என்றும் தான் அவரைக் கொல்லவில்லை என்றும் வாலிபன் கூறியிருந்தான். ஆனால் கிரேசின் கழுத்து நெரிக்கப்பட்டதுடன் அவர் இறந்த சில நிமிடங்களிலேயே வாலிபன் கிரேசின் உடலைப் புகைப்படம் எடுத்திருந்ததைக் கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டது. கடுமையான குற்றங்கள் அதிகம் நிகழாத நியூசிலாந்தில் 2018ஆம் ஆண்டில் நடந்த இக்கொலை நாட்டையே உலுக்கியது.