குள்ளமாக இருப்பதால் பள்ளியில் தொல்லை; மக்களிடமிருந்து ஆதரவு

குள்ளமாக இருப்பதால் பள்ளியில் தொல்லை; மக்களிடமிருந்து ஆதரவு

1 mins read
8936aef2-edfd-4a55-9716-3d16dfa4f7f8
ஆஸ்திரேலிய சிறுவன் 9 வயது குவைடன் பேய்ல்ஸ். படம்: ஊடகம் -

சிட்னி: குள்ளத்தன்மையுடன் பிறந்த குவைடன் பேய்ல்ஸ் (படம்) என்ற 9 வயது ஆஸ்திரேலிய சிறுவன், தன் பள்ளியில் படாத பாடுபடவே 'நான் இப்போதே செத்துவிட வேண்டும்' என்று அவனின் தாயாரிடம் புலம்பினான். அழுகையும் புலம்பலுமாக அவனின் சோகம் தோய்ந்த நிலையைக் காணொளியாக எடுத்த அவனின் தாயார், அதைத் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். குள்ளமாக இருந்த காரணத்தால் பள்ளியில் பல தொல்லைகளுக்கு ஆளாகியதால் தம் மகன்மீது எத்தகைய தாக்கம் ஏற்பட்டுள்ளது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அவர் இவ்வாறு செய்ததாகக் கூறினார். நேற்றுவரை அக்காணொளி 16 மில்லியனுக்கு மேல் பார்வையிடப்பட்டுள்ளது. இதையடுத்து பல பிரபலங்கள் உட்பட உலக மக்கள் பலர் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் இணையத்தில் ஆறுதல் வார்த்தைகளைப் பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள 'டிஸ்னிலேண்ட்'டுக்கு குவைடன் வரவேண்டும் என்ற இலக்குக்காக பிரபல அமெரிக்க நகைச்சுவை கலைஞர் ஒருவர், 150,000 அமெரிக்க டாலர் (S$210,000) திரட்டியுள்ளார்.