ஆற்றுப்பெருக்கில் சிக்கி 8 மாணவர்கள் பலி; ஐவர் மாயம்

ஆற்றுப்பெருக்கில் சிக்கி 8 மாணவர்கள் பலி; ஐவர் மாயம்

1 mins read
3b2cf979-d1bb-41bf-8363-113efabe2e98
கிட்டத்தட்ட 250 உயர்நிலை மாணவர்கள் செம்பொர் ஆற்றருகே சென்றபோது அலைகள் வந்து சிலரை இழுத்துச்சென்றதாகக் கூறப்படுகிறது. உடன் வந்தவர்களைப் பறிகொடுத்து, காணமல் தவிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள். படம்: ஏஎஃப்பி -

பள்ளி சுற்றுலாவுக்காக ஆற்றோரமாக நடந்து சென்ற மாணவர் கூட்டத்தில் சிலர், உயரமாக எழும்பிய அலைகளில் சிக்கினர்.

இதில் குறைந்தது எட்டு பேர் மாண்டுள்ளனர் என்றும் ஐவரை இன்னும் காணவில்லை என்றும் பேரிடர் தணிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (பிப்ரவரி 21) கிட்டத்தட்ட 250 உயர்நிலை மாணவர்கள் செம்பொர் ஆற்றருகே சென்றபோது அலைகள் வந்து சிலரை இழுத்துச்சென்றதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் மேலும் ஆறு மாணவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் ஆற்றுப்பக்கம் சென்றபோது மழை பெய்யவில்லை என்றும் ஆற்றுக்கருகே நடந்து கொண்டிருந்தபோது பேரலைகள் பெருக்கெடுத்து வந்தன என்றும் அமைப்பின் பேச்சாளர் கூறினார்.

இதைத் தொடர்ந்து காணாமல் போன மாணவர்களைத் தேடி மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

#இந்தோனீசிய #மாணவர் #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்