ரப்பர் காட்டுக்குள் தந்தையைக் காணாமல் தவித்த பிள்ளைகள்; இறுதியில்...

ரப்பர் காட்டுக்குள் தந்தையைக் காணாமல் தவித்த பிள்ளைகள்; இறுதியில்...

1 mins read
09b6438b-0693-4141-9d6a-f73e24d62627
மாலை 6.50 மணிக்கு சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போலிசார், சடலத்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

காலையில் தமது ஐந்து பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டுச் சென்ற தந்தை, அவர்களைப் பள்ளியிலிருந்து அழைத்துப்போக வரவில்லை.

காலை 11.30 மணிக்கு பள்ளி முடிந்தாலும் பிற்பகல் 1 மணி வரை பள்ளியிலேயே காத்திருந்த அவர்கள், டோலிஸ் குஜியு என்று அறியப்படும் தமது தந்தையின் வேலையிடத்துக்குச் சென்றனர்.

அங்கும் அவரைக் காணாதுபோகவே, தந்தையின் சகா ஒருவருடன் சேர்ந்து வீட்டுக்குச் சென்றனர் பிள்ளைகள்; அங்கும் தந்தை இல்லை.

தந்தை எங்கே என்ற தகவல் தாயாருக்கும் தெரியவில்லை. தமது மூத்த, இரண்டாவது, மூன்றாவது மகன்களை அனுப்பி தந்தையைத் தேடி அழைத்துவரப் பணித்தார் தாய்.

தேடிச் சென்ற இடத்தில், ரப்பர் காட்டுக்குள் ரப்பர் மரம் ஒன்றில் தந்தை கயிறு ஒன்றில் தொங்குவதைக் கண்ட மூத்த மகன், தன்னுடைய தம்பியை அங்கேயே விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று கத்தியுடன் திரும்பினான்.

கயிற்றை அறுத்து தந்தையைக் கீழே இறக்கிப் பார்த்ததில், அவர் உயிருடன் இல்லை என்பது தெரிந்தது.

நேற்று (பிப்ரவரி 21) நிகழ்ந்த இந்தச் சம்பவக் கோவையில், மாலை 5 மணியளவில் 44 வயதான தந்தையின் சடலத்தை மலேசியாவின் கோலா பென்யூவில் உள்ள கம்போங் குலுங் குலுங் பகுதியில் அவரது பிள்ளைகள் கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து போலிசில் புகார் அளிக்கப்பட்டது. மாலை 6.50 மணிக்கு சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போலிசார், சடலத்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

#மலேசியா #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்