ஹுபெய்யில் கொரோனா கிருமி தொற்றி 27 நாட்களுக்குப் பிறகு தாக்கம்

ஹுபெய்யில் கொரோனா கிருமி தொற்றி 27 நாட்களுக்குப் பிறகு தாக்கம்

1 mins read
67708fe5-ce6e-4669-b299-a285dc051c20
பெய்ஜிங் தெருக்களில் நடமாடுவோர் முகக்கவசத்துடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. படம்: ஏஎஃப்பி -

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் 70 வயது ஆடவருக்கு, கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்ட 27 நாட்களுக்குப் பிறகு அந்தத் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதாக உள்ளூர் அரசாங்கம் இன்று (பிப்ரவரி 22) தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து கிருமி தொற்றியதிலிருந்து அதன் தாக்கம் தென்படுவதற்கான காலம் 14 நாட்களுக்கு மேலும் இருக்கலாம் என்பதை அது காட்டுகிறது.

கிருமி தொற்றியதிலிருந்து அதன் தாக்கம் தென்படுவதற்கான கால இடைவெளி அதிகமாக இருந்தால் அது கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதுவரை 2,000க்கு மேற்பட்டோரை சீனாவில் பலி வாங்கிய கொரோனா கிருமித்தொற்று, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது.

கடந்த மாதம் 24ஆம் தேதி கிழக்கு ஈஸோவிலிருந்து வடமேற்கு ஹுபெய்யில் உள்ள ஷென்னோங்ஜியாவுக்கு தனது காரில் சென்ற திரு ஜியாங், அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தமது சகோதரியுடன் தொடர்பில் இருந்தார் என ஹுபெய் அரசாங்க இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

ஹுபெய் #சீனா #கொரோனா #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்