பில் கேட்சுக்கு நன்றி தெரிவித்த சீன அதிபர்

பில் கேட்சுக்கு நன்றி தெரிவித்த சீன அதிபர்

1 mins read
ef9c7a1e-69ee-472c-b361-bdc5af3175d7
'பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்' அறக்கட்டளைக்கு சீன அதிபர் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். படம்: ஏஎஃப்பி -

'பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்' அறக்கட்டளைக்கு சீன அதிபர் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த அறக்கட்டளை உலக அளவில் கொரோனா கிருமித்தொற்று பரவலைத் தடுப்பது, அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது, கிருமித்தொற்று சிகிச்சை போன்றவற்றுக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலரை (S$139 மில்லியன்) நிதியாக அளிப்பதாக இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்தது.

கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக சீனாவில் 2,345 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 76,000 பேர் அங்கு இந்தக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் இக்காட்டான சூழலில் சீனா இருக்கும் இவ்வேளையில், தாராள மனதுடன் அந்த அறக்கட்டளை நிதியுதவி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார் சீன அதிபர் ஸி ஜின்பிங்.

ஹுபெய் மாகாணத்தில் இன்னும் மில்லியன்கணக்கானோர் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில், சிறைகள், மருத்துவமனைகள் போன்ற பகுதிகளில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சுமார் 400 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் இன்று (பிப்ரவரி 22) உறுதிசெய்யப்பட்டது.

சீனாவில் கொரோனா கிருமித்தொற்றுக்குப் புதிதாகப் பலியாவோரின் எண்ணிக்கை சற்று குறைந்து கொண்டிருக்கும் வேளையில், பொருளியலைப் பொறுத்த வரை பாதிப்பு சிறிது காலத்துக்கு மட்டுமே என்றும் விரைவில் இந்தப் பேரிடலிருந்து சீனா மீண்டு வரும் என்று அதன் மத்திய வங்கி இன்று தெரிவித்தது.

#கொரோனா #சீனா #TheGatesFoundation #தமிழ்முரசு