இல்லத் தடைக்காப்பு உத்தரவை எந்த மாணவரும் மீறவில்லை

இல்லத் தடைக்காப்பு உத்தரவை எந்த மாணவரும் மீறவில்லை

1 mins read

எந்த மாணவரும் இல்லத் தடைக்காப்பு உத்தரவை மீறவில்லை என்று கல்வி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த கல்வி அமைச்சின் பள்ளிகள் பிரிவின் இயக்குநர் திருவாட்டி லியூ வெய் லி, சீனாவில் இருந்து திரும்பி, இல்லத் தடைக்காப்பு உத்தரவைப் பெற்றிருக்கும் மாணவர்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றார்.

மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 14 நாள் இல்லத் தடைக்காப்பு உத்தரவைக் கடைப்பிடிக்கிறார்களா என்பது நாள்தோறும் கண்காணிப்படுகிறது. ஆசிரியர்களிட மிருந்து தொலைபேசி அழைப்புகளுடன் மாணவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளுதலும் அவர்களின் பள்ளிப் பாடங்களில் வழங்கப்படுகின்றன என்று திருவாட்டி லியூ விளக்கினார்.