நெருங்கிய தொடர்பில் இருந்த 100 பயணிகள் கப்பலிலிருந்து இறங்கினர்

நெருங்கிய தொடர்பில் இருந்த 100 பயணிகள் கப்பலிலிருந்து இறங்கினர்

1 mins read

தோக்கியோ: டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் கிருமி தொற்றிய பயணிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சுமார் 100 பயணிகள் நேற்று அக்கப்பலிலிருந்து இறங்க அனுமதிக்கப்பட்டனர் என்று ஜப்பானிய உள்ளூர் ஊடகம் தெரிவித்தது. அவர்களில் ஜப்பானியர்களின் கடைசி பிரிவினரும் அடங்குவர். அவர்கள் அனைவரும் தோக்கியோவுக்கு அருகில் உள்ள ஓர் ஓடத்தில் 14 நாட் களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சொகுசுக் கப்பலிலிருந்து இறங்கிய தனது 312 குடிமக்களும் இதர ஐரோப்பிய பயணிகளும் பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோருடன் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டுவிட்ட தாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.

ஹாங்காங், தான் அனுப்பிய இரண்டாவது விமானத்தில் தனது 82 குடிமக்கள் ஜப்பானிலிருந்து புறப்பட்டு விட்டனர் என்று கூறியது. 106 பயணிகளைக் கொண்ட முதல் பிரிவினர் கடந்த வியாழக்கிழமை ஹாங்காங் சென்று சேர்ந்தனர்.