சீனாவில் கிருமித்தொற்று சம்பவங்கள் குறைந்தன. இதுவரை 2,345 மரணங்கள்

சீனாவில் கிருமித்தொற்று சம்பவங்கள் குறைந்தன. இதுவரை 2,345 மரணங்கள்

1 mins read
10cbf9b5-53ec-473f-bd3c-fca0bc71c1d4
நேற்று முன்தினம் வரை சீனாவில் புதிதாக 397 கிருமித் தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. படம்: ஏஎப்பி -

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கிருமித்தொற்றுக்குப் புதிதாகப் பலியாவோரின் எண்ணிக்கை சற்று குறைந்து கொண்டிருக்கும் வேளையில், பொருளியலைப் பொறுத்த வரை பாதிப்பு சிறிது காலத்துக்கு மட்டுமே என்றும் விரைவில் இந்தப் பேரிடலிருந்து சீனா மீண்டு வரும் என்று அதன் மத்திய வங்கி நேற்று தெரிவித்தது.

நேற்று முன்தினம் வரை சீனாவில் புதிதாக 397 கிருமித் தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டது. வியாழக்கிழமை அன்று அந்த எண்ணிக்கை 889 என்று இருந்தது. சீனாவில் தற்போது 76,288 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 2,345 பேர் மரணமடைந்து விட்டனர்.