கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி வழக்குக்காக தங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைப் பார்வை இடுவதற்காக முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், அவரின் மனைவி ரோஸ்மா மன்சூர், மகள் நூர்யானா நஜ்வா ஆகியோர் நேற்று பிஎன்எம் வங்கிக்குச் சென்றிருந்தனர். அங்கு மூன்று மணிநேரம் இருந்தபின்னர் வெளியேறினர். மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் கைப்பற்றிய பொருட்களைப் பார்வையிடக் கேட்டுக்கொண்ட விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து மூவரும் வங்கிக்குச் சென்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைப் பார்வையிட்ட நஜிப், ரோஸ்மா
1 mins read

