ஜகார்த்தா: பள்ளி சுற்றுலாவுக்காக ஆற்றோரமாக நடந்து சென்ற மாணவி கூட்டத்தில் சிலர், உயர்ந்து எழுந்த அலைகளில் சிக்கினர். இதில் குறைந்தது எட்டு பேர் மாண்டனர் என்றும் இருவரை இன்னும் காணவில்லை என்றும் பேரிடர் தணிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் கிட்டத்தட்ட 250 உயர்நிலை மாணவர்கள் செம்பொர் ஆற்றருகே சென்றபோது அலைகள் வந்து சிலரை இழுத்துச்சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் மேலும் 23 மாணவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் ஆற்றுப்பக்கம் சென்றபோது மழை பெய்யவில்லை என்றும் ஆற்றை வலம்வந்தபோது பேரலைகள் பெருக்கெடுத்து வந்தன என்றும் அமைப்பின் பேச்சாளர் கூறினார். இதைத் தொடர்ந்து காணாமல் போன மாணவர்களைத் தேடி மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

