சீனாவின் வூஹான் நகரில் கொரோனா கிருமித் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
யூனியன் ஜியாங்பெய் மருத்துவமனையில் இரைப்பை குடலியல் மருத்துவராகப் பணியாற்றி வந்த ஜியா சிசி, 29, என்னும் அந்தப் பெண் கொரோனா கிருமித்தொற்று காரணமாக மாண்டதாக மருத்துவமனை தெரிவித்தது.
கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதும் ஜனவரி 19ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து இம்மாதம் 7ஆம் தேதி வூஹான் பல்கலைக்கழக ஜோங்நாம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அதற்குப் பலனின்றி நேற்றுக் காலை ஜியா சிசி உயிரிழந்தார்.

