நெவேடா அரசியல் கட்சிக் கூட்டத்தில் வென்றார் பெர்னி சேண்டர்ஸ்

நெவேடா அரசியல் கட்சிக் கூட்டத்தில் வென்றார் பெர்னி சேண்டர்ஸ்

1 mins read
450ca8ed-6084-41e3-a5ab-bcf3c6106072
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட முற்படும் திரு பெர்னி சேண்டர்ஸ் (படம்), நேற்று முன்தினம் நெவேடா தொகுதியில் அரசியல் கட்சிக் கூட்டத்தில் வென்றார். படம்: ஏஎப்பி -

வாஷிங்டன்: எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட முற்படும் திரு பெர்னி சேண்டர்ஸ் (படம்), நேற்று முன்தினம் நெவேடா தொகுதியில் அரசியல் கட்சிக் கூட்டத்தில் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம், ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுபவர்களில் அவர் முன்னணி வகிக்கிறார். ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையின்போது திரு சேண்டர்சுக்கு கணிசமான அளவு முன்னிலை இருந்தது. அவருக்குப் பின்னால் வந்த திரு ஜோ பைடன், இரண்டாவது நிலையில் இருந்தார். ஐயோவா, நியூ ஹேம்ஷையர் தொகுதிகளை இழந்த திரு பைடன் நெவேடா தொகுதியில் மீண்டெழுந்துள்ளார்.

மக்கள் வாக்கெடுப்பில் திரு சேண்டர்ஸ் தொடர்ச்சியாக வென்ற மூன்றாவது தொகுதியாக நெவேடா விளங்குகிறது.