'1எம்டிபி விவகாரத்தை மூடி மறைக்க முன்னாள் ராணுவ ஆட்சி உதவியது'

'1எம்டிபி விவகாரத்தை மூடி மறைக்க முன்னாள் ராணுவ ஆட்சி உதவியது'

1 mins read
a3715546-1bd4-4061-b8f0-2a03a5321df4
எதிர்கால முற்போக்கு கட்சியின் பேச்சாளர் பன்னிக்கா வானிச் செய்தியாளர்களை பேங்காக்கில் உள்ள அக்கடசியின் தலைமையகத்தில் சந்தித்துப்பேசினார். படம்: ஏஎப்பி -

பேங்காக்: மலேசியாவின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான 1எம்டிபி மோசடியை மூடி மறைக்க உதவிய முன்னாள் ராணுவ ஆட்சி மீது, தடை செய்யப்பட்ட தாய்லாந்து எதிர்க்கட்சி ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

தாய்லாந்து நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான எதிர்கால முற்போக்கு கட்சி, தாய்லாந்தின் அரசமைப்பு நீதிமன்றத்தால் நேற்று முன்தினம் கலைக்கப்பட்டது.

கோடீஸ்வரரான கட்சி நிறுவனரிடமிருந்து அக்கட்சி கடன் பெற்றதன் தொடர்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்து ஜனநாயக ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். தாய்லாந்துப் பிரதமர் பிரயுட் சான் ஓ சாவின் அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் எதிர்க்கட்சியை முடக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சாடினர்.