இந்தோனீசியாவில் மீண்டும் கடும் மழை, பெரும் வெள்ளம்

ஜகார்த்தாவில் பெய்த கடும் மழையால் எங்கும் ஒரே வெள்ளம். நகரிலுள்ள 80க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வட்டாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜகார்த்தா ஆளுநர் அனிஸ் பஸ்வெடான் தெரிவித்தார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 30 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள், வெள்ளப்பாதிப்புக்கு எளிதில் ஆளாகலாம். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுகாதார வசதிகளுடன் தற்காலிக இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திரு அனிஸ் கூறினார். படம்: ராய்ட்டர்ஸ்