நாடோடி முகாமுக்குக் கடும் எதிர்ப்பு

ஏதன்ஸ்: நாடோடிகளுக்கென ஒரு தடுப்புக்காவல் நிலையத்தைக் கட்டுவதன் தொடர்பில் போலிசாருக்கும் கிரேக்க மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

லெஸ்பொஸ் என்ற கிரேக்க தீவில் நேற்று காலை ஏற்பட்ட கலவரத்தில் கிட்டத்தட்ட 500 பேர் போலிசாருடன் மோதியதாகக் கூறப்படுகிறது. கனரக இயந்திரங்களைக் கட்டுமானத் தளத்தில் இறக்கவிடாமல் செய்தனர் மக்கள். அதைத் தொடர்ந்து தெருக்களிலும் மோதல்கள் தொடர்ந்தன. வெறும் 3,000 பேருக்கு மட்டுமே அடைக்கலம் கொடுக்கக்கூடிய ஒரு நாடோடி வசிப்பிடத்தில் 18,000க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இதற்குப் பதிலாக புதிய தடுப்புக்காவல் நிலையத்தை கிரேக்கம் கட்டத் திட்டமிட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் துருக்கியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் கோரி ஐரோப்பாவுக்குள் நுழைவர். அதற்கு கிரேக்கம் கைகொடுத்து வருகிறது.