மர்மம் விலகியது: ஒன்றுகூடல் நிகழ்வுகளில் பரவிய கிருமி

மர்மம் விலகியது: ஒன்றுகூடல் நிகழ்வுகளில் பரவிய கிருமி

1 mins read
da4c7e50-eed4-4d70-ae16-2d54ae2dfeb5
சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று பெருகிய 'கிரேஸ் அசெம்பளி ஆஃப் காட்' தேவாலயம் தொடர்பான மர்மம் விலகியுள்ளது. கிருமி யாரிடமிருந்து எப்படிப் பரவியது என்பவற்றைக் கண்டறிய புதிய சோதனை  முறை உதவி உள்ளது.   படம்: எஸ்டி, கெவின் ஃபூ, இங் சோர் லுவான். -
Google News Preferred Icon

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று பெருகிய 'கிரேஸ் அசெம்பளி ஆஃப் காட்' தேவாலயம் தொடர்பான மர்மம் விலகியுள்ளது. கிருமி யாரிடமிருந்து எப்படிப் பரவியது என்பவற்றைக் கண்டறிய புதிய சோதனை முறை உதவி உள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து சுற்றுப்பயணமாக சிங்கப்பூருக்கு வந்த இருவர் கிருமி தொற்றிய 8வது, 9வது நோயாளிகளாக இங்கு சேர்க்கப்பட்டனர். கிருமி கண்டறியப்படும் முன் அவ்விருவரும் 'த லைஃப் சர்ச் அண்ட் மிஷன்ஸ்' தேவாலயம், மெய் ஹுவான் டிரைவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு குடும்ப ஒன்றுகூடல், 'கிரேஸ் அசெம்பளி ஆஃப் காட்' தேவாலயம் ஆகியவற்றில் பங்கேற்றது தெரிய வந்துள்ளது. சிங்கப்பூரின் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 23 பேர் 'கிரேஸ் அசெம்பளி ஆஃப் காட்' தேவாலயத்துடன் தொடர்புடையவர்கள்.

சீனாவைச் சேர்ந்த அவ்விருவருடன் 'கிரேஸ் அசெம்பளி ஆஃப் காட்' நிகழ்ச்சியில் 28 வயது சிங்கப்பூரர் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 66வது ஆள். சுற்றுப்பயணிகளிடமிருந்து இவருக்குக் கிருமி பரவியதை புதிய சோதனை முறை கண்டறிந்தது.

தேவாலயத்தில் பணியாற்றிய அந்த சிங்கப்பூரரிடமிருந்து அங்கு வந்தோருக்கும் பின்னர் அவர் கலந்துகொண்ட சீனப் புத்தாண்டு விருந்துக்கு வந்தோருக்கும் பரவியது கண்டறியப்பட்டு உள்ளது.

சுற்றுப்பயணி இருவரிடமும் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில் அவர்களிடம் கிருமித்தொற்று காணப்படவில்லை என்றும் ஆனால் கிருமித்தொற்றுக்கு அவர்கள் ஏற்கெனவே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டதை புதிய சோதனை முறை கண்டுபிடித்தது என்றும் சுகாதார அமைச்சு நேற்று விளக்கியது.