பிரேசிலில் ஐந்து நாட்களில் 147 கொலைகள்

பிரேசிலியா: பிரேசிலில் போலிசாரின் வேலைநிறுத்த போராட்டத்தால் குற்றங்கள் அதிகரித்ததோடு, கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 147 கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக, சீரா மாகாணம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 
அங்கு அவர்கள் துப்பாக்கிகளைக் கையில் ஏந்தி வீதிகளில் கண்காணித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.