'சிங்கப்பூரில் கிருமித்தொற்று எந்நேரத்திலும் அதிகரிக்கலாம்'

'சிங்கப்பூரில் கிருமித்தொற்று எந்நேரத்திலும் அதிகரிக்கலாம்'

1 mins read
74dca378-6e71-4e69-8d3f-0782ff50f11b
சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றின் மோசமான காலகட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக இப்போதே கூற முடியாது என்றும் எந்த நேரத்திலும் உயர வாய்ப்புள்ளது என்றும் சுகாதார அமைச்சின் தலைமைச் சுகாதார அறிவியலாளர் டான் சோர் சுவான் எச்சரித்து இருக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றின் மோசமான காலகட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக இப்போதே கூற முடியாது என்றும் எந்த நேரத்திலும் உயர வாய்ப்புள்ளது என்றும் சுகாதார அமைச்சின் தலைமைச் சுகாதார அறிவியலாளர் டான் சோர் சுவான் எச்சரித்து இருக்கிறார்.

"கிருமி பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் சிங்கப்பூரின் அணுகுமுறை செயல்திறன்மிக்கதாக உள்ளது.

"சமூக அளவில் பரவியதற்கு இதுவரை சான்று கிடைக்கவில்லை. ஆனாலும், மற்ற நாடுகளில் கிருமி தொற்றும் வேகத்தைக் காணும்போது வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலமாக அது பரவும் அபாயமுள்ளது.

"ஆகையால், நாம் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்," என்றார் பேராசிரியர் டான்.

'சார்ஸ்' பரவலின்போது சிங்கப்பூரின் பொதுச் சுகாதார நடவடிக்கைகளுக்குத் தலைமை வகித்தவர் இவர்தான்.

#கொரோனா #கொவிட்-19 #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்