கோலாலம்பூர்: மலேசிய ராணுவத்தில் மலாய் அல்லாத ஒருவர், புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார். பிரிகேடியர் ஜெனரலான சூரியகலா சூரியபகவான் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனால் மலேசிய வரலாற்றில் முதல் பெண் மேஜர் ஜெனரல் என்ற பெருமையை சூரியகலா பெற்றுள்ளார். சென்ற ஞாயிற்றுக்கிழமை சாபாவில் நடைபெற்ற 87வது ராணுவ தினத்தில் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயாரான சூரியகலா அர்ப்பணிப்புமிக்க அதிகாரி என மலேசிய ராணுவத் தளபதி ஜெனரல் அஹமட் ஹஸ்புல்லா முஹமட் நவாவி பாராட்டியுள்ளார். வரும் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி சூரியகலா அறுபது வயதைத் தொடுகிறார். புதிய பதவி உயர்வு தமது உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என்று அவர் கூறியுள்ளார்.
மலேசியாவின் முதல் பெண் மேஜர் ஜெனரல் சூரியகலா
1 mins read
மலேசிய ராணுவத்தில் மலாய் அல்லாத ஒருவர், புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார். பிரிகேடியர் ஜெனரலான சூரியகலா சூரியபகவான் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். படம்: மலேசிய ஊடகம் -

