வடகொரிய மக்கள் மீது இரக்கம்

1 mins read

ஐக்கிய நாடுகள்: கொரோனா கிருமி வேகமாகப் பரவி வரும் வேளையில் வடகொரிய மக்களுக்கு மனிதாபிமானக் கரத்தை நீட்ட ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு மன்றத்தின் ஜெர்மனி தூதர் தெரிவித்துள்ளார். அணுவாயுத விவகாரம் தொடர்பில் வடகொரியா மீது பொருளியல் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கிருமி பரவலால் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்னும் நோக்கில் சில விதிவிலக்குகளுக்கு மன்றம் அனுமதித்து உள்ளதாக அவர் கூறினார்.