ஆளில்லா ரயில்வே கேட்: விரைவு ரயில் மோதியதில் சிதைந்துபோன பேருந்து; பலி எண்ணிக்கை 20ஐ தாண்டியது

1 mins read
9d1507a1-21d6-4691-ab69-e56fe55864c4
இந்த கோர விபத்தில் சிக்கிய பேருந்தில் பயணம் செய்த 20 பேருக்கு மேல் உடல் நசுங்கி உயிரிழந்தனர்; 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 3

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரிலிருந்து சர்கோதா நகரத்தை நோக்கி சுமார் 60 பயணிகளுடன் நேற்று (பிப்ரவரி 28) இரவு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

சிந்து மாகாணம் சுக்குர் மாவட்டம் ரோரி பகுதியில் உள்ள ஆளில்லா ரெயில்வே கேட் பகுதியை பேருந்து கடக்க முற்பட்டது.

அப்போது, ராவல்பிண்டியில் இருந்து கராச்சியை நோக்கி, மணிக்கு சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்த 'பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ்' ரயில் அந்தப் பகுதியை அடைந்தது.

தண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட பேருந்தின் மீது ரயில் மின்னல் வேகத்தில் மோதியது.

ரயிலின் முன்புறம் சிக்கிக்கொண்ட பேருந்து சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் தூக்கி வீசப்பட்டது.

இந்த கோர விபத்தில் சிக்கிய பேருந்தில் பயணம் செய்த 20 பேருக்கு மேல் உடல் நசுங்கி உயிரிழந்தனர்; 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சுக்குர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், இந்த கோர விபத்தில் சிக்கிய பேருந்தில் பயணம் செய்த 20 பேருக்கு மேல் உடல் நசுங்கி உயிரிழந்தனர்; 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருபவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

#பாகிஸ்தான் #ரயில்_பேருந்துமோதல் #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்