முடிவுக்கு வந்தது மலேசியாவின் அரசியல் குழப்பம்; பிரதமராகிறார் முகைதீன் யாசின்

முடிவுக்கு வந்தது மலேசியாவின் அரசியல் குழப்பம்; பிரதமராகிறார் முகைதீன் யாசின்

1 mins read
395f32a1-b95c-4250-9fb4-600ab0ec4941
திரு முகைதீன் யாசின் நாளை காலை 10.30 மணிக்கு மலேசியாவின் எட்டாவது பிரதமராகப் பதவியேற்பார் என இஸ்தானா நெகரா அறிவித்துள்ளது. படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

அரசியல் கட்சித் தலைவர்களை இன்று (பிப்ரவரி 29) சந்தித்த பிறகு, திரு முகைதீன் யாசினை மலேசியாவின் அடுத்த பிரதமராக மலேசிய மாமன்னர் தேர்ந்தெடுத்துள்ளார்.

திரு முகைதீன் யாசின் நாளை காலை 10.30 மணிக்கு நாட்டின் எட்டாவது பிரதமராகப் பதவியேற்பார் என இஸ்தானா நெகரா அறிவித்துள்ளது.

பிரதமர் பதவிக்கான பெரும்பான்மை ஆதரவுக்காக பக்கத்தான் ஹரப்பானுடன் மீண்டும் இணைய இடைக்காலப் பிரதமர் டாக்டர் மகாதீர் முடிவெடுத்த நிலையில் அரண்மனையிலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

"அனைத்து கட்சித் தலைவர்களின் பிரதிநிதிகள், தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, பிபிபிஎம் கட்சியின் தலைவரான திரு முகைதீன் யாசின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக மாமன்னர் ஊகிக்கிறார்," என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இஸ்தானா குறிப்பிட்டது.

இது தொடர்பான கூடுதல் செய்திகளுக்கு நாளைய (1/03/2020) தமிழ் முரசின் அச்சுப் பிரதியை நாடுங்கள்!

#மலேசியா #எட்டாவது பிரதமர் #மாமன்னர் #அரண்மனை

குறிப்புச் சொற்கள்