இஸ்டான்புல்: ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல விரும்பும் அகதிகள் தொடர்ந்து துருக்கி வழியாகவே போகலாம் என்று நேற்று துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டொவன் கூறினார். போர் பிடியில் சிக்குண்ட சிரியாவிலிருந்து மக்கள் பெருமளவில் படையெடுத்து துருக்கி வழி ஐரோப்பாவுக்குள் போவதைச் சமாளிக்க முடியவில்லை என்றார் திரு எர்டொவன். அப்படி இருந்தும் வெள்ளிக்கிழமையன்று அகதிகளுக்கு துருக்கி வழிவிட்டது. "இந்தக் கதவுகளை நாங்கள் மூடமாட்டோம். அதற்குக் காரணம் என்ன? ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றியம் அதன் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும்," என்றார் அவர். இதுவரை 18,000 அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
துருக்கி: எங்கள் கதவுகளை மூடமாட்டோம்
1 mins read
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல விரும்பும் அகதிகள் தொடர்ந்து துருக்கி வழியாகவே போகலாம் என்று நேற்று துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டொவன் கூறினார். கிரேக்க எல்லையில் ஐநா அமைப்பின் ஊழியர்கள் அகதிகளுக்கு உணவு விநியோகம் செய்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

