கராச்சி: பாகிஸ்தானில் மேலும் இருவருக்குக் கிருமி தொற்றியதைத் தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்கு ஆனது. அந்நாட்டின் முதல் கொரோனா கிருமி தாக்குதல் சம்பவம் கடந்த புதன்கிழமை பதிவானது. அன்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளது என்றும் ஒருவர் வீடு திரும்பும் நிலையில் உள்ளதாகவும் பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் ஜாஃபர் மிர்ஸா கூறினார். இதுவரை பாதிக்கப்பட்ட நால்வரும் அண்மையில் ஈரான் சென்று திரும்பியவர்கள் என்ற விவரம் வெளிவந்துள்ளது.
கொவிட்-19: பாகிஸ்தானில் நால்வருக்கு பாதிப்பு
1 mins read
பாகிஸ்தான்-ஈரான் எல்லை நகரான டாஃப்டானில் நடத்தப்பட்ட உடல்வெப்பப் பரிசோதனை. படம்: ஏஎஃப்பி -

