டிரம்ப் செய்தியாளர் கூட்டத்தில் இந்திய பத்திரிகையாளரை கேலி செய்த செய்தியாளர்

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் அவரது இந்திய பயணத்தைப் பற்றி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர் கேள்வியை முன்வைத்தார்.

அப்போது அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் முகபாவனைகளைக் காட்டி கேலி செய்த காணொளி இணையத்தில் தீ போல பரவிவருகிறது.

டுவிட்டர் பக்கத்தில் முதலில் பதிவேற்றப்பட்ட அந்தக் காணொளியைக் கண்டு அந்த அமெரிக்க பத்திரிகையாளரை சாடிய பல கருத்துகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.
மூன்று மில்லியனுக்கும் மேற்பட்டோர் அந்தக் காணொளியைக் கண்டுள்ளனர்.

Who is that reporter in the green mocking an Indian reporter? I bet she thinks Trump is racist. pic.twitter.com/YtGv32XOUe

— Damon imani (@damonimani) February 27, 2020

இபோனி பொவ்டன் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த செய்தியாளர் இனவாத முறையில் நடந்துகொண்டதற்காகவும் இந்திய செய்தியாளர் பேசுவதைக் கேலி செய்ததற்காகவும் இணையவாசிகளால் சாடப்பட்டுவருகிறார்.

ரகுபிர் கொயால் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த இந்திய செய்தியாளர், அதிபர் கார்டரின் பணிக்காலம் முதல் வெள்ளை மாளிகை நிருபராக இருந்துவருவதாகவும் அவரது ஆங்கிலப் புலமை தரம்மிக்கது என்றும் காணொளியை பதிவேற்றிய டேமன் இமானி என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!