கோலாலம்பூர்: புதிய அமைச்சரவை அமைக்கும் விவகாரம் தொடர்பாக பிரதமர் முகைதீன் யாசினுடன் பேசுவதற்காக அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமீடி மீதான ஊழல் வழக்கு விசாரணை நேற்று ஒத்திவைக்கப்பட்டது.
ஆக்கல்புடி அறக்கட்டளை ஊழல், பண மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி வழக்கு தொடர்பாக 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார் ஸாஹிட் ஹமீடி.
புதிய அமைச்சரவை உருவாக்கத்திற்கான ஆலோசனையின் போது ஸாஹிட் ஹமீடி இருப்பது தேவையானது," என்று அவரது வழக்கறிஞர் கூறினார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் தொடங்கும் எனவும் நீதிபதி கூறினார்.
இதற்கிடையே பேசிய ஸாஹிட், "இதற்கு முந்திய வழக்குகளை போல், என் மீதான வழக்கு கைவிடப்படவில்லை.
"எந்த வழக்குகளையும் திரும்ப பெறாமல், என் மீதான அவப்பெயரை நீதிமன்றத்தில் துடைப்பேன்.
"என் மீதான வழக்குகள் அரசியல் காரணங்களுக்காக போடப்பட்டவை என்றாலும் அதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்," என்றார்.

