ரோஹிங்யா அகதிகள் சுட்டுக்கொலை

1 mins read
1059b56d-8f9a-465f-a800-0e426bcbfe36
ரோஹிங்யா அகதிகள் தங்கியிருக்கும் ஜம்தோலி முகாம் அமைந்திருக்கும் உக்கியா வட்டாரம். படம்: ஏஎப்பி -

டாக்கா: மியன்மார் அகதிகளான ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்ளாதேஷின் காக்ஸ் பஜார் எனும் பகுதிக்கு அருகிலுள்ள முகாமில் உள்ளார்.

அகதிகளில் சிலர் போதைப்பொருள், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக தங்களுக்கு துப்பு கிடைத்ததையடுத்து, குறிப்பிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கிடமான ஏழு ரோஹிங்யா மக்களை பங்ளாதேஷ் போலிசார் சுட்டுக் கொன்றதாக சிறப்பு போலிஸ் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அங்கிருந்து பெரும் அளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.