பொதுமக்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் போலிஸ் விசாரணைக்கு அவர்களை உட்டுபடுத்தலாகாது என்றும் மலேசியாவின் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரும் அஸ்மின் அலி தெரிவித்து உள்ளார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தவோ அல்லது தங்களது கருத்துகளை முன்வைக்கவோ மலேசியர்களுக்கு உரிமை உண்டு என்றார் அவர்.
"துடிப்பான, ஆரோக்கியமான ஜனநாயகத்திற்குப் பலதரப்பட்டவர்களின் கருத்து மிகவும் அவசியம். எனவே கருத்துகளைச் சொல்ல அவர்களை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
"மனித உரிமை ஆர்வலர்களான மரினா மகாதீரும் அம்பிகா சீனிவாசனும் ஞாயிற்றுக்கிழமை மெர்டேக்கா சதுக்கத்தில் ஜனநாயக ஆதரவுக் கூட்டங்களில் பங்கேற்றதற்காக அவர்களுக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் விசாரணையை போலிஸ் கைவிடவேண்டும்," என்று இன்று (மார்ச் 3) வெளியிட்ட அறிக்கையில் திரு அஸ்மின் வலியுறுத்தி உள்ளார்.
#மலேசியா #அஸ்மின் #அம்பிகா #மரினா #தமிழ்முரசு

