ஹைதராபாத்: கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் டெல்லியைச் சேர்ந்தவர், மற்றொருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். ஹைதராபாத்தைச் சேர்ந்த 24 வயது மென்பொறியாளர் பெங்களூரிலிருந்து ஹைதராபாத்துக்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஹைதராபாத்தின் மகேந்திரஹில்ஸ் பகுதியில் தங்கியிருந்தார். அதன்பின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபின் புனேயிலிருந்து வந்த அறிக்கையின்படி அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவல்களை தெலுங்கானா சுகாதார அமைச்சர் எட்லா ராஜேந்தர் கூறினார். பொறியாளருடன் பேருந்தில் பயணம் செய்தவர்கள், குடும்பத்தினர், அப்பல்லோ மருத்துவர்கள், ஊழியர்கள் என 80 பேரைக் கண்டறிந்து அவர்களையும் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

